தற்போதைய செய்திகள்

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து: தமிழ்நாடு அரசு

30th Jul 2021 06:13 PM

ADVERTISEMENT

அரசியல் கட்சித் தலைவர்கள் மீதான அனைத்து அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும் பதியப்பட்டிருந்த அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதியப்பட்ட 130 வழக்குகள் ரத்தாகின்றன. 

ADVERTISEMENT

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மீது பதியப்பட்ட அவதூறு வழக்குகளும், அதன் மீதான நடவடிக்கைகளும் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : MKStalin TNGovt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT