தற்போதைய செய்திகள்

டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் 136வது பிறந்த நாள்

30th Jul 2021 11:51 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: முதன்முதலில் இந்தியாவிலேயே மருத்துவம் படித்து பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் 136 ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள திலகவதியார் திருவருள் ஆதீன வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன், திமுக நகரச் செயலர் க. நைனாமுகமது, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எம்எம். பாலு, மூத்த குழந்தைகள் மருத்துவர் சா. ராம்தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தொடர்ந்து டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் நினைவாக கைம்பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களும் திலகவதியார் ஆதீனம் சார்பில் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

Tags : டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் Dr. Muthulakshmi Ammaiyar 136th Birthday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT