தற்போதைய செய்திகள்

புதுச்சேரி கம்பன் கழக துணைச் செயலாளர் கி. கல்யாணசுந்தரம் காலமானார்

29th Jul 2021 12:16 PM

ADVERTISEMENT


புதுச்சேரி கம்பன் கழகத்தின் துணை செயலாளரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான கி. கல்யாணசுந்தரம்(88), வயது முதிர்வின் காரணமாக புதன்கிழமை இரவு காலமானார்.

அரசு ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், புதுச்சேரி கம்பன் கழக துணைச் செயலாளராக இருந்து, கம்பன் கழக விழாக்களில் மறைந்த கம்பன் கழக செயலர் முருகேசன் அவர்களுடன், இணைந்து பெரும் பணியாற்றியவர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதி புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் வீதியில் வசித்துவந்த இவர், வயது முதிர்வின் காரணமாக புதன்கிழமை இரவு 11 மணிக்கு உயிரிழந்தார்.

இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ஜெய்சங்கர், லிங்கேஸ்வரன், தேன்மொழி, மலர்விழி ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.

ADVERTISEMENT

இவரது உடல் புதுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT