தற்போதைய செய்திகள்

சின்னமனூரில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரணை

24th Jul 2021 09:50 AM

ADVERTISEMENTஉத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறி சின்னமனூரில் பிரியாணி மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

அதன்படி சனிக்கிழமை காலை 5 மணியளவில் இருந்து சின்னமனூர் தேரடி பகுதியில் உள்ள அவரது கடையை மற்றும் சில பகுதிகளில் தேசிய புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : police investigation Chinnamanur தேசிய புலனாய்வு முகமை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT