தற்போதைய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: இரண்டாவது  நாளாக 2.30  அடி உயர்வு

24th Jul 2021 10:54 AM

ADVERTISEMENT

 

கம்பம்: முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் தொடரும் மழையால், இரண்டாவது  நாளாக நீர்மட்டம் 2.30 அடி உயர்ந்தது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 38.20 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 30.60 மி.மீ., மழை பெய்தது. இதனால் சனிக்கிழமை நிலவரப்படி அணைக்குள் வினாடிக்கு, 7,139 கன அடி தண்ணீர் வரத்து வந்தது.

2-வது 3.55 அடி உயர்வு:  வெள்ளிக்கிழமை அணையின் நீர்மட்டம், 131.50 அடியாக இருந்தது, (மொத்த உயரம் 142 அடி), அணையில் நீர் இருப்பு, 5,048 மில்லியன் கன அடி, நீர்வரத்து வினாடிக்கு 4,294 கன அடியாகவும், தமிழகப்பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு, 900 கன அடியாக இருந்தது.

ADVERTISEMENT

சனிக்கிழமை நிலவரப்படி, நீர்மட்டம் 133.80 அடியாகவும், நீர் இருப்பு, 5,586 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு, 7,139 கன அடியாகவும், வெளியேற்றம், 900 கன அடியாகவும் இருந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1.25 அடி உயர்ந்தும், சனிக்கிழமை நிலவரப்படி 2.30 அடி உயர்ந்தும், இரண்டு நாள்கள் நிலவரப்படி நீர்மட்டம் மொத்தம், 3.55 அடி உயர்ந்தும் உள்ளது.

தொடர்மழை காரணமாக, வெள்ளிக்கிழமை 4,294 கன அடியும், சனிக்கிழமை வினாடிக்கு 7, 139 கன அடி தண்ணீரும் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு, 900 கன அடி வெளியேறுவதால், லோயர்கேம்ப்பில் இரண்டு மின்னாக்கிகளில், 41 மற்றும் 40 என மொத்தம், 81 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.

Tags : water level mullaiperiyardam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT