தற்போதைய செய்திகள்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று: 35,087 பேர் குணமடைந்தனர்

DIN


புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 546 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளது என்று சுகாதார வல்லுநா்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை விதிகளை முறையாக கடைப்பிடிக்காமல் பலா் செயல்படுவதால் தொற்று அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,159 -ஆக உயா்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு விகிதம் 2.40 சதவிகிதமாக உள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 5 சதவிகித்திற்கும் கீழ் உள்ளது.  தற்போது இது 2.22 சதவிகிதமாக உள்ளது.  இது கடந்த 33 ஆவது நாளாக 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

35,087 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,05,03,166 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,08,977-ஆக உள்ளது. மொத்த வழக்குகளில் 1.31 சதவிகதமாக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 97.35 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 546 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,20,016-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மே 4-ஆம் தேதி 2 கோடியைக் கடந்த நிலையில், ஜூன் 23-ஆம் தேதி 3 கோடியைக் கடந்தது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 42,78,82,261 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தம் 45,45,70,811 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மட்டும் 16,32,266 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT