தற்போதைய செய்திகள்

வட இந்தியாவின் பல இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்: ஐ.எம்.டி.

11th Jul 2021 08:41 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: தில்லி உள்பட வட இந்தியாவின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை ஜூலை 10-ஆம் தேதிக்குள் தில்லி உள்ளிட்ட வட இந்தியாவின் சில இடங்களில் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த  நிலையில், தற்போது வரை மழை பொழியவில்லை.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹாபத்ரா கூறுகையில், தில்லியில் தென்மேற்கு பருவமழையின் பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டு வந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது, இதனை உறுதி செய்து உள்ளது என்றார். மேலும்  ஞாயிற்றுக்கிழமை லேசான மழையும், நாளை திங்கள்கிழமை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

"ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் தில்லி, குஜராத், மத்திய மகாராஷ்டிரா, கடலோர ஆந்திரா, யானம், தெலங்கானா, கடலோர தெற்கு கர்நாடகம், கேரளம், மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வடஇந்திய மாநிலங்களும், கடலோர மகாராஷ்டிராவுக்கு  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT