தற்போதைய செய்திகள்

சசிகலாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

27th Jan 2021 05:42 PM

ADVERTISEMENT

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விடுதலை தொடர்பான ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசையும் கொடுத்தது கர்நாடக சிறைத்துறை 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு இன்றுடன் சிறைத் தண்டனை முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விடுதலை சான்றிதழை வழங்கினர். அதனுடன்  அமலாக்கத்துறை நோட்டீஸையும் வழங்கியுள்ளனர். 

ADVERTISEMENT

கடந்த ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், அவை வாங்கியதற்கான பல கூடுதல் தகவல்களை வழங்க அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

அமலாக்கத்துறை கடிதங்களுக்கு சசிகலா பதிலளிக்காத நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags : சசிகலா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT