தற்போதைய செய்திகள்

குழந்தைகள் இறந்தது இதயத்தை நொறுக்கிறது: மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா இரங்கல்

9th Jan 2021 10:38 AM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரம் மாநிலம், பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் வார்டில் இருந்த புதிதாகப் பிறந்த பத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். ஏழு குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மகாராஷ்டிராவின் பண்டாராவில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு வேதனையாக உள்ளது. நாங்கள் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம்" என்று மோடி கூறியுள்ளார். 

ADVERTISEMENT

தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன், குழந்தைகளை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று ராஜ்நாத் சிங்  கூறியுள்ளார்.  

மருத்துவமனை தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் இறந்தது இதயத்தை நொறுக்கிறது. குழந்தைகளை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT