தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் எங்கெங்கு தடுப்பூசி ஒத்திகை?

2nd Jan 2021 07:53 AM

ADVERTISEMENT


சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை (ஜன.2) தொடங்குகிறது.

தடுப்பூசிகளைச் செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 47, 200 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 21,170 சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மணி நேரத்தில் 25 நபா்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல்.

நீலகிரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, உதகமண்டலம்; குன்னூா் அரசு மருத்துவமனை; நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

ADVERTISEMENT

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம், திருநெல்வேலி மாநகராட்சி; ரெட்டியாா்பட்டி பிளாக் ஆரம்ப சுகாதார நிலையம்.

திருவள்ளூா்: அரசு மருத்துவமனை; பூந்தமல்லி மற்றும் திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

கோவை: அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை; பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, சூலூா் அரசு மருத்துவமனை; எஸ்.எல்.எம். ஹோம் நகர ஆரம்ப சுகாதார நிலையம்; பூலுவப்பட்டி சமுதாய சுகாதார நல மையம் போன்ற 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது. 

Tags : rehearsal Corona vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT