தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.48.27 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

2nd Jan 2021 04:46 PM

ADVERTISEMENT

துபையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.48.27 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

துபையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து பயணிகளிடையே சோதனையை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். 

அப்போது துபையிலிருந்து தனியார் விமானத்தில் சென்னை வந்த இருவர் தங்களது உள்ளாடையில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.48 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பிலான 937 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

Tags : gold smuggling
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT