தற்போதைய செய்திகள்

கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பழ. நெடுமாறன்

24th Feb 2021 06:30 PM

ADVERTISEMENT


தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ. நெடுமாறன் சிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பினார்.

கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட அவா், கடந்த 12 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த இரு வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை முடிந்து புதன்கிழமை வீடு திரும்பினார்.

சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை  என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குணமடைந்துள்ள பழ. நெடுமாறனை ஒரு மாத காலமேனும் முழு ஓய்வு  எடுக்குமாறும் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைவு காரணமாக சந்திப்புகளை முற்றிலும் தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மார்ச் 31 வரை நெடுமாறன் பங்கேற்கவிருந்த கட்சி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : pazha nedumaran
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT