நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் பல முக்கியப் பிரமுகர்கள் மாற்று கட்சி மற்றும் புதிதாக கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் முருகன், சி.டி. ரவி முன்னிலையில் சிவாஜி மூத்த மகனான ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் பாஜகவில் இணைந்துள்ளார்.