தற்போதைய செய்திகள்

பிப்.13 முதல் முகாலய தோட்டம் திறப்பு

11th Feb 2021 07:12 PM

ADVERTISEMENT

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகாலய தோட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி திறக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் செயலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ள முகாலய மாளிகை பிப்ரவரி 13 முதல் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்ட செய்தியில்,

பொதுமக்களின் பார்வைக்காக முகாலய தோட்டம் பிப்ரவரி 13 முதல் மார்ச் 21 வரை திறக்கப்படுகிறது. தினமும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவர்.

ADVERTISEMENT

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

Tags : mughal garden
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT