தற்போதைய செய்திகள்

தேர்தல் முடிவதற்குள் மம்தாவும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறுவார்: அமித்ஷா

11th Feb 2021 03:24 PM

ADVERTISEMENT

தேர்தல் முடிவதற்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கூச்பேஹரில் நடைபெற்ற கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில்,

தேர்தல் முடிவதற்குள் மம்தாவும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கூறுவார் என நான் உறுதியளிக்கிறேன்.

ADVERTISEMENT

130 க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், திரிணமூல் குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், கொலைகாரர்கள் ஒவ்வொருவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

மோடியுடன் எப்போதும் மம்தா சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். சுபாஷ் நிகழ்ச்சியின் போது கூட அவர் சண்டையிட்டார். அந்த நிகழ்விலாது நீங்கள் அரசியல் செய்யாமல் இருந்திருக்கலாம் என கூறினார்.

Tags : west bengal Amit Shah
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT