தற்போதைய செய்திகள்

பாஜகவில் இணைந்தார் கராத்தே தியாகராஜன்

11th Feb 2021 08:12 PM

ADVERTISEMENT

சென்னை: காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் பாஜகவில் வியாழக்கிழமை (பிப்.11) இணைந்தார்.

சென்னை திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயில் அருகில் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், சி.டி,ரவி முன்னிலையில் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளா்களுடன் கட்சியில் இணைந்தார்.

நடிகா் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் இன்று மாலை பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Karate Thiyagarajan bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT