தற்போதைய செய்திகள்

கொச்சியில் பிப்.15 வரை டிரோன்கள் பறக்கத் தடை

11th Feb 2021 07:55 PM

ADVERTISEMENT

கொச்சியில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, வரும் 14 -ஆம் தேதி கொச்சி வர உள்ளாா். கொச்சி வரும் அவா், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடம் நிறுவனத்தின் புதிய ஆலையை தொடங்கி வைக்கிறார்.. மேலும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே இருப்பதால், பிரதமா் மோடியின் கேரள வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பிப்ரவரி 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். அதன்பின், அங்கிருந்து கொச்சிக்கு மதியம் 1.35 மணியளவில் கிளம்புகிறார்.

இந்நிலையில், கொச்சி நகரில் இன்று(பிப்.11) முதல் திங்கள்கிழமை(பிப்.15) வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags : drones Kochi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT