தற்போதைய செய்திகள்

நாட்டில் 74.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை

11th Feb 2021 09:46 PM

ADVERTISEMENT

 

நாட்டில் இதுவரை 74.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"வியாழக்கிழமை மட்டும் மாலை 7 மணி வரை 4,13,752 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 74,30,866 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 57,90,832 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 16,40,034 பேர் முன்களப் பணியாளர்கள்."

ADVERTISEMENT

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 7,52,501 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,11,762 பேருக்கு போடப்பட்டுள்ளது. 

Tags : Corona vaccine vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT