தற்போதைய செய்திகள்

ஆப்கனில் 50 தலிபான்கள் சுட்டுக் கொலை

11th Feb 2021 03:56 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினரால் 50 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை இரவு காந்தஹார், ஹெல்மண்ட், சர்பூல் மற்றும் ஃபரியாப் ஆகிய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

சர்புல் மாகாணத்தின் சோஸ்மா-காலா மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 8 தலிபான்கள் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் விமானப்படை ஃபரியாப் மாகாணத்தின் கைசர் மாவட்டத்தில் தலிபான்கள் இருப்பிடத்தை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர், 8 பேர் காயமடைந்தனர். 

மேலும், ஹெல்மண்ட் மாகாணத்தின் நாவா, நஹ்ரே-சாராஜ் மற்றும் கார்ம்சீர் மாவட்டங்களில் தலிபான்களின் 2 தளபதிகள் உட்பட 27 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

காந்தஹார் மாகாணத்தில் நேற்று இரவு, அர்கந்தாப் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 6 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

Tags : Taliban Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT