தற்போதைய செய்திகள்

பிப். 7-க்கு பதில் 8-ம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார்: தினகரன்

4th Feb 2021 01:36 PM

ADVERTISEMENT

பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு பதில் 8-ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, உடல்நலம் தேறியதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் இருந்து டிசம்பர் 31-ம் தேதி  விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் அவர் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில் சசிகலா பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக டிடிவி தினகரன் முன்பு அறிவித்திருந்தார்.

இதனிடையே சசிகலா பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாகத் தினகரன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு எல்லையில் தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று தினகரன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT