தற்போதைய செய்திகள்

மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான சாகுபடிக்குத் தண்ணீர் திறப்பு

4th Dec 2021 11:12 AM

ADVERTISEMENT

 

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. 

நிகழாண்டு பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையிலிருந்து சனிக்கிழமை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் தண்ணீர் திறந்துவைத்தார்.  

இதையும் படிக்க | காவிரிப் பாசன பகுதிகளில் கனமழை: மழை நீரில் மூழ்கிய நெல்வயல்கள்!

ADVERTISEMENT

தொடர்ந்து அவர் கூறும்போது: இதன்மூலம் முன்னுரிமைப் பகுதியான 1 மற்றும் 2 ஆம் ரீச் பகுதிகளுக்கு பிசான சாகுபடிக்காக இன்றிலிருந்து மார்ச் 31 வரை 118 நாட்களுக்கு விநாடிக்கு 100 முதல் 444 கனஅடி வரை தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.  இதன் மூலம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நான்குநேரி மற்றும் பாளையங்கோட்டை வட்டங்களுக்குள்பட்ட 17 171 குளங்களின் கீழ் உள்ள 11,134 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். 

தொடர்ந்து 3 மற்றும் 4 ஆம் ரீச் பகுதிகளுக்கு முதல்வரின் அனுமதி பெற்று திறக்கப்படும். மேலும் சிறப்பு அனுமதி பெற்று ராதாபுரம், உடன்குடி பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்கும் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரவருணி வெள்ள நீர்க் கால்வாய்ப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். மணிமுத்தாறு அணையில் அவசரகாலத்தில் 43 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்ற முடியும் என்பதால் மழைக்காலத்தில் பாதுகாப்பு குறித்து பயப்படத் தேவையில்லை என்றார். 

இதையும் படிக்க | எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் மிக கனமழை; குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, வட்டாட்சியர் வெற்றிச் செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் பெல்சி மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Manimuttarur dam Opening water cultivation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT