தற்போதைய செய்திகள்

மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

4th Dec 2021 08:37 AM

ADVERTISEMENT


மதுரை: கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று சனிக்கிழமை (டிச.4) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தென்மாவட்டங்களான விருதுநகர், மதுரை மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. 

ADVERTISEMENT

கனமழை காரணமாக மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று கனமழை பெய்து வரும் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Tags : Holidays schools and colleges Madurai heavyrain கனமழை கல்லூரிகளுக்கு விடுமுறை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT