தற்போதைய செய்திகள்

கொங்கணாபுரம் பகுதியில் கனமழை:  மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

4th Dec 2021 02:08 PM

ADVERTISEMENT


எடப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஓமலூர் சங்ககிரி மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை கொட்டியது. இதனால் அப்பகுதியில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கச்சிராயன் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. 

இதையும் படிக்க |  ரூ.44,500 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

இந்நிலையில், ஏரியின் கரைப் பகுதியில் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், சங்ககிரி - ஓமலூர் இடையிலான சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சாலை வழியாக விரும் வாகனங்கள் மகுடஞ்சாவடி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

 இதையும் படிக்க | ​சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

பாதிக்கப்பட்ட பகுதியில் சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பன் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

Tags : Heavy rain Konganapuram area Traffic stop state highway
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT