தற்போதைய செய்திகள்

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இலங்கை அரசை கண்டிக்காதது ஏன்? மதுரை எம்பி கேள்வி

3rd Dec 2021 10:21 PM

ADVERTISEMENT

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதை அவையின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இதையும் படிக்க | ‘சாவர்க்கரைப் பற்றி பேச சிவசேனைக்கு உரிமையில்லை’: தேவேந்திர பட்னாவிஸ்

கடந்த 10 ஆண்டுகளில் 12 பேர் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசின் அணுகுமுறை என்றால் ஒன்று. இலங்கை அரசின் அணுகுமுறை என்றால் வேறொன்றா? எனக் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய அவர், “குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம். தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா? தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசின்  தாக்குதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags : Su venkatesan Madurai Fishers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT