தற்போதைய செய்திகள்

பெருங்காமநல்லூர் வீரத் தியாகிகள் மணிமண்டபம் எம்எல்ஏ ஆய்வு

12th Aug 2021 12:00 PM

ADVERTISEMENT

 


உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் வீரத் தியாகிகளின் மணிமண்டபம் கட்டும் இடத்தை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர்  பி. ஐயப்பன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்துக்கு எதிராக உயிரிழந்த தியாகிகளுக்கு அதிமுக அரசு மணிமண்டபம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி. ஐயப்பன்  நேரில் சென்று கட்டடப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் கட்டட ஒப்பந்ததாரரிடம் விரைவில் கட்டட பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.  

இவருடன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் துரைதன ராஜன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி. பி. ராஜா. சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் பிச்சை ராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர்  மகேந்திர பாண்டி, முன்னாள் பெருந்தலைவர் டி ஆர் பால்பாண்டி, செல்லம்பட்டி இளைஞர் அணி ரகு, மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT