தற்போதைய செய்திகள்

மதுரை ஆதீனம் மருத்துவமனையில் அனுமதி: ஆதீனங்கள் நலம் விசாரிப்பு

12th Aug 2021 09:40 PM

ADVERTISEMENT

மதுரையில் மூச்சுத்திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை, குன்றக்குடி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் மூச்சுத்திணறல் காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனத்துக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | அதிமுகவில் 6 பேர் அடங்கிய சட்ட ஆலோசனைக் குழு அமைப்பு

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை, தருமபுர ஆதீனம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், செங்கோல் ஆதீனம் ஆகிய ஆதீனங்கள் வியாழக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.  

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழங்கச் சொல்லி மகள் கண் முன்னே இஸ்லாமியர் மீது தாக்குதல்: உ.பி.யில் கொடூரம்

சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறும்போது,  கடும் மூச்சுத்திணறல் காரணமாக மதுரை ஆதீனத்துக்கு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூச்சுத்திணறலை கட்டுப்படுத்த செயற்கை சுவாசமும் அளிக்கப்படுகிறது என்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT