தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் பலி

8th Aug 2021 08:13 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கியதில் 3 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம்  ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை துணி துவைத்து விட்டு அதை வீட்டின் முன் உள்ள கம்பியில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை துணியை காயவைத்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தாக்கியதில் அவருடன் இருந்த 3 வயது பெண் குழந்தை அவந்திகா, பாட்டி இந்திராவும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், குழந்தையின் தாய் மகாலட்சுமி(25) அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT