தற்போதைய செய்திகள்

ஆடி அமாவாசை பக்தர்கள் நீராட தடை: வெறிச்சோடிய ராமேசுவரம்

8th Aug 2021 01:07 PM

ADVERTISEMENT

 

ராமேசுவரம்: கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசை நாளில் ராமேசுவரத்திற்கு பக்தர்கள் வர தடையால் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வெறிச்சொடி கானப்பட்டது. வெளிமாவட்டத்தில் இருந்து வந்த பொதுமக்களை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

 

ADVERTISEMENT

ராமநாதசுவாமி கோயில் பகுதியில்  பொதுமக்கள் அனுமதி தடை செய்யப்பட்டதால் வெறிச்சோடி ஞாயிற்றுகிழமை கானப்பட்டது. 

நாடு முழுவதிலும் கரோனா நோய் பரவல் மூன்றாம் அலை பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தொடர்ந்து அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதுடன் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  
 
ஆடி அமாவாசை நாள்களில் அதிகளவில் கடற்கரையில் பொதுமக்கள் கூடும் போது கரோனா நோய் பரவல் ஏற்படும் என்பதால் அதனை தடுக்கும் நடவடிக்கையாக ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் கடற்கரையில் கூடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமேசுவரத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை செய்யப்பட்டதால் ஞாயிற்றுகிழமை வெறிச்சொடி கானப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக ஆடி அமாவாசை நாளில் ராமேசுவரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் வரை பொதுமக்கள் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோன்று தேவிபட்டணம்,சேதுக்கரை உள்ளிட்ட பகுதியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவது வழக்கம். 

இந்த நிலையில், கரோனா மூன்றாம் அலையை தடுப்பு நடவடிக்கை காரணமாக, பொதுமக்கள் ஆடிஅமாவாசை நாளில்  வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் வருவதை தடுக்க மாவட்டம் முழுவதிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.

ராமநாதசுவாமி கோயிலில் இருந்து அக்னி தீர்த்த கடலுக்கு செல்லம் வழியில் பக்தர்கள் இன்றி வெளிச்சோடி கானப்பட்டது. 

மேலும் பேருந்துகளில் ராமேசுவரம் வரும் பக்தர்களை ராமநாதசுவாமி கோயில்,அக்னி தீர்த்த கடலில் நீராடுவதை தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் தகரங்களை கொண்டு தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் காவல்துறையினர் ஒளிபெருக்கி மூலம் பொதுமக்களை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. 

ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்களை காவல்துறையினர் ஒளிபெருக்கிமூலம் அறிவிப்பு செய்து திருப்பி அனுப்பும் பணியில் ஞாயிற்றுகிழமை ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன். 

அக்னி தீர்த்த கடல் பகுதியை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதால் கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணியில் தீவிரமாக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ராமேசுவரம் முழுவதிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கானப்படுகிறது. 

மேலும் ராமநாதசுவாமி கோயிலை சுற்றி பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

ராமேசுவரத்தில் ஆடிஅமாவாசை நாளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு பொதுமக்கள் வந்த நிலையில் இந்த ஞாயிற்றுகிழமை ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சொடின கானப்பட்டது குறிப்பிடதக்கது.  

ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்களன் செல்லாத வகையில் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஞாயிற்றுகிழமை ஈடுபட்டனர்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா நோய்த்தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்வர்களின் ஆன்மா சாந்தியடைய ஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுக்க நினைத்து மக்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் வேதானை தெரிவித்தனர். ஆனால் கரோனா நோய்த்தொற்று மூன்றாம் அலையை தடுக்க வேற வழியில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதே போன்று தேவிபட்டணம்,சேதுக்கரையிலும் பக்தர்கள் நீராட தடை செய்யப்பட்டது. அங்கு வந்த மக்களை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT