தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் கருணாநிதி 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

7th Aug 2021 11:59 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல்லில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஷ் குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதனைத்தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

இதேபோல் நாமக்கல்- சேலம் சாலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ. காந்திசெல்வன் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், குமாரபாளையம், திருச்செங்கோடு, மோகனூர் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT