தற்போதைய செய்திகள்

குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களுக்கு தடை: போலீசார் குவிப்பு

7th Aug 2021 11:53 AM

ADVERTISEMENT

 


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் குச்சனூர் அருள்மிகு சனீஸ்வரர் ஆலயத்திற்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் ஆடிப் பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறும்.  கடந்த 3 வாரம் சனிக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அர்ச்சனைகள் தவிர்க்கப்பட்டன.

இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் பல்வேறு திருவிழா நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துவருதால் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து குச்சனூர் சனீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத 4 ஆவது சனிக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் வருகை இருக்கும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் கோயில் நுழைவுப் பகுதி கோயில் நிர்வாகம் சார்பில் இரும்பு தகரத் தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT