தற்போதைய செய்திகள்

ஓசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை நாளை தொடங்குகிறார்

4th Aug 2021 07:49 PM

ADVERTISEMENT

ஓசூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நாளை (ஆகஸ்ட் 5) துவங்கி வைக்க உள்ளார்.

அவரை ஓசூர் விமான நிலையத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், பர்கூர் எம்எல்ஏ மதியழகன், முன்னாள் எம்எல்ஏ இசை சத்யா, திமுக முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் அவர்கள் வீட்டிற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்  உயிரிழந்த பிரகாஷ் அவர்களின் மனைவி சிவம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | அரசுப் பணியில் பதவி உயர்வு: வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி எதிர்பார்ப்பு

இதனைத்தொடர்ந்து நட்சத்திர விடுதியில் இன்று இரவு தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT