தற்போதைய செய்திகள்

அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து தேவையில்லை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

30th Apr 2021 09:05 AM

ADVERTISEMENT


சென்னை: அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து தேவையில்லை என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிா் மருந்து வாங்குவதற்காக நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனைகளில் காத்துக்கிடந்தனர். 

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை முதல் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை முதல் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக அங்கு 2 கவுன்ட்டா்கள் திறக்கப்பட்டு ரெம்டெசிவிா் மருந்து வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்குவதற்காக கரோனா நோயாளிகளின் உறவினா்கள் புதன்கிழமை நள்ளிரவில் இருந்தே காத்துக் கிடந்தனா். சென்னையை சோ்ந்தவா்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் மருத்துவச் சான்றிதழ்களுடன் காத்திருந்தனர். 

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனா நோயாளிகள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை. தனியார் மருத்துவனைகள் தேவையின்றி இந்த மருந்தை அனைத்து நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை செய்துள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT