தற்போதைய செய்திகள்

ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருத்துவர் கைது

30th Apr 2021 09:12 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை தாம்பரத்தில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ. 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்த மருத்துவர் முகமது இம்ரானை போலீசார் கைது செய்துள்ளனர். 

கரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிா் மருந்து வாங்குவதற்காக நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனைகளில் காத்துக்கிடக்கும் நிலையில், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ. 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மருத்துவருக்கு உதவியாக இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை ஊழியர் விக்னேஷ் உள்ளிட்ட மூவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT