தற்போதைய செய்திகள்

எழுத்தாளர் பெ.சு.மணி மறைவு

27th Apr 2021 08:10 PM

ADVERTISEMENT

80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளர் பெ.சு. மணி தனது 87ஆம் வயதில் தில்லியில் காலமானார்.

எழுத்தாளர் பெ.சு.மணி தமிழ் எழுத்தாளர்கள் வட்டத்தில் நன்கு அறியப்படுபவர். வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம், கம்பராமாயணக் கட்டுரைகள்` உள்ளிட்ட பல தொகுப்பு நூல்களை வெளியிட்டவர் பெ.சு.மணி  `இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பழந்தமிழ் இதழ்கள், வீரமுரசு சுப்பிரமணிய சிவா, எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி.வெங்கட்ரமணி` உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

வெ. சாமிநாத சர்மா மற்றும் ம.பொ.சி.யின் தீவிர ஆர்வலரான இவர் சாகித்ய அகாதமிக்காக ம.பொ.சி. பற்றியும் சாமிநாத சர்மா பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.

`பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும்,  சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்` போன்ற நூல்களும் இவரது படைப்புகளே. விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள், ஸ்ரீசாரதா தேவி, சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்` போன்றவை இவரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்.

ADVERTISEMENT

எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியரான இவர் தினமணி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்த இவர் செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் காலமானார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT