தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணையில் குறைந்தது நீர்வரத்து

DIN

மேட்டூர் அணையின் நீர்வரத்து 27,077 கனஅடியாக குறைந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இந்த உபரி நீர்வரத்து காரணமாக கடந்த 21ந்தேதி காலை 89.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நேற்று பிற்பகலில்  அணையின் வரலாற்றில் 66-வது ஆண்டாக 100 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 100.02 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று நாள்களாகக் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாகக் குறைந்து இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 27,077 கன அடியாக இருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 850 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 64.86 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT