தற்போதைய செய்திகள்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில மணி நேரங்களில் அறிவிப்பு?

25th Sep 2020 10:11 AM

ADVERTISEMENT

 

பிகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பை வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்குத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்குச் செய்தியாளர்கள் சந்திப்புக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

சந்திப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும் பிகார் தேர்தல் அறிவிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT