தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில், செப். 23, 2020

23rd Sep 2020 04:51 PM

ADVERTISEMENT

விமானம்சூழ் வானம்: இந்தியா - சீனா இடையே அமைதி குலைந்துள்ள நிலையில் எல்லையையொட்டியுள்ள லடாக் பகுதியில்  புதன்கிழமை வலம்வந்துகொண்டிருந்த இந்திய விமானப் படை விமானம், பனிமலைப் பின்னணியில்.

வாகனம்சூழ் எல்லை: எல்லையில் சீனாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மணாலி - லே நெடுஞ்சாலையில் புதன்கிழமை தளவாடப் பொருள்களுடன் லடாக் நோக்கிச் செல்லும் இந்திய ராணுவ வாகனங்கள்.

 

ADVERTISEMENT

எதிர்ப்புசூழ் சட்டம்: பஞ்சாபில் அமிர்தசரஸில் புதன்கிழமை நடைபெற்ற, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிரான போராட்டத்தில்,  கட்சித் தொண்டர்களுடன் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான நவஜோத் சிங் சித்து.

வெள்ளம்சூழ் வீதி: மும்பையில் புதன்கிழமை பெந்தி பஜார் பகுதியில் பெருமழையால் வெள்ளக்காடாக மாறிவிட்ட வீதிகளில் நடந்துசெல்லும் மக்கள்.

தேர்தல்சூழ் அன்பு: மூன் டவுனில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் முடிவில் பேத்தி அரபெல்லா குஷ்னாரை அரவணைத்துக்கொள்ளும் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

Tags : newsphotos
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT