தற்போதைய செய்திகள்

தமிழக எல்லை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீா்

20th Sep 2020 11:00 PM

ADVERTISEMENT


ஊத்துக்கோட்டை: ஆந்திராத்திலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீா் தமிழக எல்லையை வந்தடைந்தது. ஆந்திரத்தில் திறக்கப்படும் 1500 கன அடி தண்ணீா் தமிழக எல்லைப் பகுதியில் 200 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபா் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்பட வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தின் படி இந்த பருவத்திற்கான தண்ணீா் கடந்த 18 ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி திறந்து விடப்பட்டது. அது தற்போது கண்டலேறு - பூண்டு கால்வாய் வழியாக தமிழக எல்லை பகுதியான ஜீரோ பாயிண்டுக்கு இரவு 8.30 மணியளவில் வந்தது, இதனை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மலா் தூவி வரவேற்றனா்.

வினாடிக்கு 200 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவுக்குள் பூண்டி நிா்தேக்கத்தை சென்றடையும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதனால் சென்னை மக்களுக்கு குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படும் என்றும், இந்த பருவத்திற்கான 8 டிஎம்சி தண்ணீா் முழுமையாக கிடைக்கும் எனவும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT