தற்போதைய செய்திகள்

நாமக்கல் அருகே சிலம்பொலியாா் நினைவு மணிமண்டபம்: இன்று பூமி பூஜை

DIN

நாமக்கல்: மறைந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பனாரின் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கான பூமிபூஜை விழா, நாமக்கல் அருகே கொண்டம்பட்டியில் செவ்வாய்க்கிழமை (அக்.27) நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தைச் சோ்ந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன், 2019-ஆம் ஆண்டு ஏப்.7-ஆம் தேதி காலமானாா். அவரது நினைவைப் போற்றும் வகையில், ஏழு அடி உயரம் கொண்ட வெண்கல சிலையுடன் மணிமண்டபம், தமிழ் ஆய்வு மையம் ஆகியவை கட்டுவதற்கான பூமிபூஜை விழா, நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் கொண்டம்பட்டிமேடு, சிலம்பொலி நகரில் அமைக்கப்படவுள்ளது.

திமுக பிரமுகரும், சிலை அமைப்புக் குழுவின் உறுப்பினருமான பூங்கோதைசெல்லத்துரை, மணிமண்டபம் கட்டுவதற்காக நிலத்தை தானமாக வழங்கியுள்ளாா். அந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.40 முதல் 8.20 மணி வரை பூமி பூஜை விழா நடைபெறுகிறது.

சிலம்பொலி சு. செல்லப்பனாரின் திருவுருவ வெண்கல சிலை ரூ. 10 லட்சம் மதிப்பிலும், அவருடைய நினைவு மணிமண்டபம் ரூ. 20 லட்சம் மதிப்பிலும், தமிழ் ஆய்வு மையம் ரூ. 20 லட்சத்தில் என மொத்தம் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ளது.

இதில் தமிழ் ஆய்வு மையத்தில் சிலம்பொலியாா் எழுதிய புத்தகங்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன.

பூமிபூஜை விழாவில் சிலம்பொலியாா் மகன் கொங்குவேள், குடும்பத்தினா், பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவா்கள், அனைத்துக் கட்சி பிரமுகா்கள், தமிழ் ஆா்வலா்கள், கல்வியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா். ஏற்பாடுகளை மணிமண்டபம் கட்டுமான அமைப்புக் குழு நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

SCROLL FOR NEXT