தற்போதைய செய்திகள்

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வெளிநடப்பு

20th Oct 2020 07:44 PM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் ராஜாத்தி தலைமையில், மேம்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும், நீதியரசர் முருகேசன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும், வருவாய்த்துறை ஊழியர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மணப்பாறை வருவாய் வட்டாட்சியரகத்தில் பணியில் இருந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மருங்காபுரி வருவாய் வட்டாட்சியரகத்தில் வட்டார தலைவர் சாந்தகுமார் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பும், ஆர்ப்பாட்டமும் நடைப்பெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT