தற்போதைய செய்திகள்

திருப்பூரில் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

20th Oct 2020 07:37 PM

ADVERTISEMENT

 

திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைத் தொடங்கக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூரில் அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் சார்பில் அப்பாச்சி சாலையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி பனியன் சங்க பொதுச்செயலாளர் என்.சேகர் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற பனியன் தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:

திருப்பூரில் பணியாற்றி வரும் பனியன் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது.  

இதையடுத்து, அனைத்து சங்கங்களின் சார்பில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று முதலாளிகள் சங்கங்களுக்கு 16 அம்சக்கோரிக்கை அனுப்பப்பட்டும் இதுவரையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐடியூ சார்பில் சந்திரன், ஐஎன்டியூசி சார்பில் சிவசாமி, எல்.பி.எஃப். சார்பில் பாலசுப்பிரமணியம், எம்.எல்.எஃப்.சார்பில் மனோகர், எச்.எம்.எஸ்.சார்பில் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT