தேனி: அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் நீட்தேர்வு எழுதியதில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த பெரியகுளம் மாணவனுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் இன்று (திங்கள்கிழமை) டேப் (கணினி) வழங்கப்பட்டது.
சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மோகன் தலைமை வகித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் மதுரை மண்டலத்தலைவர் எம்.பலசுப்பிரமணியன், மதுரை வட்ட மேலாளர் கே.ஆர்.ஜெகதீஸன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவன் என்.ஜீவித்குமாரை பாராட்டி சால்வை அணிவித்து டேப் வழங்கினார்கள். மேலும் பள்ளி தலைமையாசிரியர் மோகனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாணவனின் தாய் பரமேஸ்வரி, பஞ்சாப் நேஷனல் வங்கி மதுரை வட்ட அலுவலர் சி.பி.ஜவஹர் அமிர்தராஜ், தேனி கிளை மேலாளர் வி.ஜெயக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.