தற்போதைய செய்திகள்

மாணவியின் மருத்துவப் படிப்புக்கு ஊக்கத் தொகை: பள்ளி நிர்வாகம்

19th Oct 2020 09:34 PM

ADVERTISEMENT


பல்லடம்: பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் அவருக்கு ரூ.25 ஆயிரம் மருத்துவப் படிப்பு ஊக்கத் தொகை இன்று (திங்கள்கிழமை) வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம்  பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவி என். ஸ்வேதா நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 621 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை பாராட்டி பள்ளி செயலர் மருத்துவர் கவிதா அருண் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் மாணவி ஸ்வேதாவிற்கு மருத்துவ படிப்புக்கான 5 ஆண்டு காலமும் ஆண்டு தோறும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் பள்ளி அறக்கட்டளை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது என்று பள்ளி குழும தலைவர் கே.கிருஷ்ணன் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஜெயந்தி கல்வி நிறுவன முதல்வர்கள் விஜயராஜன், அண்ணாமலை மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT