தற்போதைய செய்திகள்

எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் காலமானார்

3rd Oct 2020 03:13 PM

ADVERTISEMENT

புகழ்பெற்ற எழுத்தாளர் கி.அ. சச்சிதானந்தம் காலமானார்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி , சென்னையில் சனிக்கிழமை காலை காலமானார்.

சாமுவேல் பெக்கட் எழுதிய நோபல் பரிசுபெற்ற வெயிட்டிங் ஃபார் கோடோ நாடகத்தைத் தமிழில் `கோடோவிற்காக காத்திருத்தல்' என மொழிபெயர்த்தவர். தாகூரின் சித்ரா (நாடகம்), ரோசா லக்சம்பெர்கின் சிறைக்கடிதங்கள், பனிமலைப் பிரதேசத்துக் கதைகள், கல்மாளிகை (மராட்டி நாடகம்) போன்றவற்றையும் தமிழில் பெயர்த்தவர்.

பீகாக் பதிப்பகம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட 'மௌனி கதைகள்' தேர்ந்த தொகுப்பு. மௌனி பற்றியும் தனியொரு நூலை சச்சிதானந்தம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

`நடை', `இலக்கிய வட்டம்' இதழ்களைத் தொகுத்திருக்கிறார். `அம்மாவின் அத்தை' `உயிர் இயக்கம்' என சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.

மௌனியை, சி.சு.செல்லப்பா ஆகியோரைப் பெரிதும் சிலாகிப்பவர். எழுத்து காலந்தொட்டு இலக்கிய, எழுத்தாளர்களின் நெருங்கிய உறவு காரணமாக அனைத்தைப் பற்றியும் அறிந்தவொருவராக வலம் வந்தவர் கி.அ. சச்சிதானந்தம்.

'வரகுவாசல் தெரு' என்றொரு நாவலையும் கி.அ. சச்சிதானந்தம் எழுதியுள்ளார்.  விரைவில் இந்த நாவல் வெளிவரவுள்ளது.

Tags : obituary
ADVERTISEMENT
ADVERTISEMENT