தற்போதைய செய்திகள்

விராலிமலை: நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மேதி 2 பேர் பலி 

25th Nov 2020 09:10 AM

ADVERTISEMENT

 

விராலிமலை நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மேதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து ஒரு சொகுசு காரில் 5 பேர் சொந்த ஊரான மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை 58 வயதான மோகன் ஓட்டி வந்தார். புதன்கிழமை அதிகாலை கார் விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சென்றுகொண்டிருந்த போது நிலைதடுமாறி சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த மணிகண்டன்(45), மதுரை பனையூரைச் சேர்ந்த பிரபு(53) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும் மதுரை அய்யனாபுதரத்தைச் சேர்ந்த சிவகுமார், பிரபு, மோகன் உள்ளிடோர் பலத்த காயமடைந்தனர்.

ADVERTISEMENT

தகவலறிந்த நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற விராலிமலை காவலர்கள் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காயமடைந்த 3 பேரையும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

விபத்துக்குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT