தற்போதைய செய்திகள்

நிவர் புயல்; வேல் யாத்திரை ரத்து: எல்.முருகன் பேட்டி

25th Nov 2020 03:10 PM

ADVERTISEMENT


திருச்சி: நிவர் புயல் காரணமாக பாஜகவின் வேல் யாத்திரை ரத்து செய்யப்பசுவதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: 

நிவர் புயல் காரணமாக ஏற்கனவே தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வெற்றி வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மாவட்டங்களிலும் புயல் காரணமாக வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு மட்டும் நடத்திவிட்டு டிசம்பர் 5 ஆம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறும்.

தமிழக அரசு நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக முழுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் பாஜகவினர் ஈடுபடுவார்கள்.

ADVERTISEMENT

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அதிமுக உறுதி செய்த நிலையில் பாஜக தரப்பில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் அறிவிக்கும்.

எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கலந்தாலோசித்து அறிவிக்கப்படும். அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆலோசனையில் பாஜக 40 தொகுதிகள் கேட்கப்பட்டது என்பது ஒரு யூகம் தான். எத்தனை இடங்கள் கேட்பது போன்றவை குறித்து இப்பொழுது ஜாதகம் பார்க்க தேவையில்லை.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார். சரியான நேரத்தில் சரியான முடிவை ஆளுநர் அறிவிப்பார் என முருகன் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT