தற்போதைய செய்திகள்

கந்தர்வகோட்டையில் காவல்துறையை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

DIN


கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கேட்டும் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விசிக ஒன்றிய செயலாளர் நா. வெள்ளையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உ. அரசப்பன் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வி. ரெத்தினவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி, வளவம்பட்டி ஆகிய பகுதிகளில் சமூக ஒற்றுமையையும், பொது அமைதியை கெடுக்கும் விதமாக தலித் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சமூக விரோதிகளையும், அவர்களை பாதுகாத்திடும் கட்சித் தலைவர்களையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், விசிக மாவட்ட செயலாளர் வெ. ம. விடுதலை கனல், சி.பி.எம்.எல். மாவட்ட செயலாளர் பழ. ஆசைதம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மு. மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். 

கந்தர்வகோட்டையில்  விசிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT