தற்போதைய செய்திகள்

திருவாடானை பகுதியில் வேளாண்துறை சார்பில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி

25th Nov 2020 01:45 PM

ADVERTISEMENT

 

திருவாடானை: திருவாடானை வட்டாரத்திற்கு உள்பட்ட மங்களக்குடி ஆண்டாவூரணி பாண்டுகுடி ஆகிய கிராமங்களில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ்  தெருக்கூத்து கலை நிகழ்ச்சி  புதன்கிழமை நடைபெற்றது. 

திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா தலைமை வகித்தார். இந்த கலை நிகழ்ச்சியின் வாயிலாக வேளாண்மைத் துறையில் நடைமுறையில் உள்ள முக்கிய திட்டங்களான பயிர்காப்பீடு, தென்னையை புயல் காலங்களில் பாதுகாத்தல், நுண்ணீர் பாசன திட்டம் , மற்றும் அட்மா திட்டத்தின் சிறப்புகள் குறித்து பின்வருமாறு விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

1.நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் வரும் துணைநிலை நீர் மேலாண்மை (சுவாமா) திட்டத்தின் கீழ் உறைகிணறு ரூபாய் 25 ஆயிரம் மானியத்தில் அமைப்பது, பைப்புகள் ரூபாய் பத்தாயிரம் மானியத்தில் வழங்குவது, ஆயில் என்ஜின் ரூ.15,000 மானியத்தில் வழங்குவது மற்றும் நீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் ரூ.40,000 மானியத்தில் அமைப்பது குறித்து கூறப்பட்டது.

ADVERTISEMENT

2. ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் ஆடுகள் மாடுகள் வளர்த்து பராமரிப்பு செய்வது, வரப்பு பயிராக பயறு வகை பயிர்களை சாகுபடி செய்வது குறித்து விழிப்புணர்வு விவசாயிகளிடையே ஏற்படுத்தப்பட்டது.

3. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்கள் ஆக்குவது குறித்து விவசாயிகளிடையே விளக்கிக் கூறப்பட்டது.

4. தேசிய நீடித்த நிலையான மானாவாரி வளர்ச்சி இயக்கத்தின் கீழ் எண்ணெய் வித்து பயிர்கள், பயறுவகைப் பயிர்கள், சிறுதானிய பயிர்கள் அவற்றின் விதைகளை 50 சதவிகித மானியத்தில் வேளாண் விரிவாக்க மையம் திருவாடானையில் பெற்று சாகுபடி செய்து, நிகர லாபம் ஈட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 30 - 2020 அன்று இறுதி தேதி என்றும் ஒரு ஏக்கர் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு விவசாயி செலுத்தவேண்டிய பிரீமியம் தொகை ரூபாய் 252.60 எனவும் இதனால் விவசாயி பெறப்படும் இழப்பீடு தொகை ஒரு ஏக்கருக்கு ரூபாய் 16,000 என்ற விபரம் கலை நிகழ்ச்சி வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

இதுபோன்று தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் நிவர் புயலில் இருந்து தென்னையை பாதுகாப்பது மற்றும் தென்னைக்கு பயிர் காப்பீடு செய்வது அதாவது 15 வயதிற்குள்பட்ட மரம் ஒன்றிற்கு ரூ.2.25 காசுகள் பிரீமியம் தொகை செலுத்தியும், 16 வயதிற்கு மேற்பட்ட மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50 பிரீமியம் செலுத்தியும் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டது. 

எனவே விவசாயிகள் தங்களது தென்னை மற்றும் நெற்பயிரினை  காப்பீடு செய்து நிவர் புயலின் தாக்கத்திலிருந்து பயிர்களை காத்திடுமாறும், நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு விவசாயி தங்களது ஆதார் கார்டு நகல் வங்கி கணக்கு புத்தக நகல், மூவிதழ் அடங்கள் முன்மொழிவு படிவம் ஆகிய ஆவணங்களுடன் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா விவசாயிகளிடையே கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் பழனியாண்டி, உதவி தொழில்நுட்ப மேலாளர் வேல்முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags : Street art show agriculture
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT