தற்போதைய செய்திகள்

விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நேரம் குறைப்பு

DIN


தமிழகத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை நேரம் 5 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் சூழலுக்கேற்ப அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துகொள்ள என அரசு அறிவித்திருந்த நிலையில், புதன்கிழமை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் ஊழியர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நேரம் பகல் 12 முதல் மாலை 5 மணிக்குள் நேரத்தை குறைத்து அறிவித்துள்ளனர்.

இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 224 மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறந்து மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் விற்பனை நேரம் ஐந்து மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT