தற்போதைய செய்திகள்

கடலூர் முகாமில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு

25th Nov 2020 03:20 PM

ADVERTISEMENT


கடலூர்: கடலூரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் ஆய்வு செய்தார்.  

நிவர் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில்,  கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. புயலை எதிர்கொள்ளும் வகையில், மீட்புப் பணிக்காக மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நிகர் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் பல்நோக்கு தங்கும் முகாமில் உள்ள மக்களை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சந்தித்து ஏற்பாட்டு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 

உணவு, குடிநீர் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி, நகராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமரன், நகராட்சி ஆணையர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT